January 2, 2018

Sweet Pongal using Jaggery with LAL HIT Integration #SayNoToFoodPoisoning


வணக்கம் நண்பர்களே,

2017 ஆம் வருடம் நிறைவடைந்து விட்டது என நம்ப முடியவில்லை. நாட்கள் வேகமாக செல்கின்றன ஆனால் சில மகிழ்ச்சியான சம்பவங்கள் என்றும் மனதில் நீங்காமல் இருக்கின்றன குறிப்பாக குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடிய பண்டிகை விழாக்கள். அதேபோல் இந்த வருடமும் சந்தோசம் நிறைந்த வருடமாக இருக்க வேண்டிக்கொள்கிறேன். எல்லா பண்டிகை விடவும் மிகவும் பிடித்தனமான பண்டிகை என்னவென்றால் பாரம்பரிய மிக்க பொங்கல் பண்டிகை தான். மண் பானையில் பொங்கலும் களி  மண் வைத்து செய்ய படும் அடுப்பும் தான் அதற்கு காரணம். இன்றய ஓட்டமான வாழக்கையில் இது எல்லாம் காணாமல் போய்விடுகின்றது. ஜனவரி மாதம் கொண்டாட படும் இந்த பண்டிகை நான்கு நாட்களுக்கு கொண்டாட படும் பண்டிகை. சூரிய பகவானுக்கும், நம் பண்ணை விலங்குகளுக்கும் நன்றி காட்டும் விதமாக இந்த பண்டிகை கொண்டாட படுகிறது. சிறு வயதில், உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்களுடனும் சேர்ந்து பொங்கல் படைத்தது கரும்பு தின்று கொண்டாடிய நாட்கள் தான் நினைவுக்கு வருகிறது.

பண்டிகைக்கு ஒரு வாரம்  முன்பே வீடு முழுவதும் சுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். என்ன தான் என் அம்மா வாரம் ஒரு முறை சமையலறையை சுத்தம் செய்தாலும், சிறிய பூச்சிகளின் அட்டகாசம் மட்டும் குறையாது. குறிப்பாக கரப்பான் பூச்சிகளின் தொல்லை அனைத்து இல்லங்களிலும் ஒரு குறையாகவே இருக்கும். சிங்க், சிலிண்டர்க்கு கீழ் மற்றும் வெடிப்பு போன்ற கடினமான இடங்களில் சுலபமாக ஒளிந்து கொள்ளும். அதனை அழிப்பதே நமக்கு சவாலாக இருக்கும். பல முக்கியமான வியாதிகளான food poison, டைபாய்டு, வயிற்று போக்கு, காலரா மற்றும் வயிற்று சம்பந்தமான வியாதிகள் உருவாக்கு வதற்கு  காரணமே இந்த கரப்பான் பூச்சிகள் தான். அவர்கள் வடிகால் இருந்து கிருமிகள் மற்றும் பாக்டீரியாவை எடுத்து, பின்னால் உணவு மற்றும் பாத்திரங்களை மாசுபடுத்துகின்றனர், இதனால் நோய்கள் ஏற்படுகின்றன. பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளையே முதலில் தாக்கும். ஆகவே வீட்டை சுத்த மாக வைப்பது மட்டுமே இதனுடைய தீர்வு. #SayNoToFoodPoisoning
இன்றைய நிலையில், என் அம்மா போல் வாரம் ஒருமுறை சமையலறை முழுவதையும் சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமாகி விட்டது. அந்த நிலையும் இன்று அவசியம் இல்லை. சிவப்பு ஹிட் இருக்கும் போது, தாய்மார்களுக்கு என்ன கவலை ? அதனுடைய "Deep Reach Nozzle " கடினமான இடங்களான சிங்க், சிலிண்டர்க்கு கீழ் மற்றும் வெடிப்பு போன்ற இடங்களுக்கு சுலபமாக சென்று வேலை செய்யும். அதனில் புதிய வாசனை கொண்டுள்ள சிவப்பு ஹிட்டும் வந்துஉள்ளது.  மாதம் ஒரு முறை நன்கு சமையலறையை சுத்தம் செய்து லால் ஹிட் உபயோகம் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். தொடர்ந்து பயன் படுத்துவதன் மூலம் கரப்பான் பூச்சி களிடம் இருந்து விடுதலை பெறலாம். அது மட்டும் இன்றி, நல்ல சுகாதாரமான வாழ்க்கையும் மேற் கொள்ள முடியும்.

சிவப்பு ஹிட்டை உபயோக படுத்துவது மிகவும் எளிது. எப்படி உபயோகிக்க வேண்டும் என கீழ் கண்ட புகைப்படத்தை பார்க்கவும்... #SayNoToFoodPoisoningஇன்னும் சில நாட்களே பொங்கல் திருநாளுக்கு உள்ளதால், எங்கள் வீட்டில் பொங்கல் கொண்டாடும் முறையும், அதனுடன் சேர்த்து சுவை மிக்க  பால், அருசி, வெல்லம் மற்றும் நெய்  சேர்த்து செய்யும் இனிப்பு பொங்கல் செய் முறையும் பதிவிட உள்ளேன். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லவர்கள். அப்படி சிறப்பு வாய்ந்த மாதம் தை மாதம். பொங்கல் என்பதற்கு அர்த்தம் பொங்கி வருகிறது என்று அர்த்தம். மொத்தம் பொங்கல் கொண்டாட்டம் நான்கு நாட்களாக கொண்டாட படுகிறது. முதல் நாள் போகி, அன்று அனைவரும் அதிகாலை எழுந்து குளித்து வீட்டில் உள்ள பழைய பொருட்களை வாசலில் வைத்து தீயிட்டு கொளுத்துவார்கள்.
இரண்டாம் நாளான முக்கியமான தினம் சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுவதால் சூரிய பொங்கல் எனவும் தை பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. பாலை பானையில் கொதிக்கவைத்து, கொதி வந்த பிறகு அரிசி, வெல்லம் மற்றும் நெய் ஆகியவற்றைச் சேர்த்து வேக வைக்க வேண்டும். நாங்கள் வழக்கமாக இரண்டு வகையான இனிப்பு மற்றும் உப்பு பொங்கல் செய்து, அனைத்து காய்கரிகால் செய்யப்படும் அவியல் மற்றும் கொண்டக்கடலை குழம்புடன் பரிமாறுவோம். கடவுளுக்கு நெய்வேத்யம் செய்த பிறகு வாழை இலையில் உணவு பரிமாறப்படும்.
மூன்றாவது நாளான தினம், மாட்டு பொங்கல் என்று அழைக்க படும். அன்று எங்கள் இல்லத்தில் அணைத்து அசைவ உணவுகளும் சமைத்து படைத்தது உண்பார்கள். சில இடங்களில் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டு நடைபெறும். நான்காவது தினமான காணும் பொங்கல் அன்று, உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும் சுற்றுலா சென்று மகிழ்வார்கள்.

சுவையான இனிப்பு பொங்கலின் செய் முறை இதோ உங்களுக்காக...

தேவையான பொருட்கள் :

1/4 கப் பச்ச அரிசி
1/2 - 3/4 கப் வெல்லம், துருவியது
3/4 கப் பால்
1 கப் தண்ணீர்
3 டபிசப் நெய்
5 - 6 உலர் திராச்சை
5 - 6 முந்திரி
2 ஏலக்காய்
5 - 6 பாதாம்

செய்முறை :

அரிசியை நன்கு கழுவி, நீரில் உறவைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

பால் பொங்கி வந்த பிறகு, அரிசியில் உள்ள தண்ணீரை வடிகட்டி பாலில் சேர்க்கவும்.

அடுப்பை சிறியதாகி சாதத்தை வேகவைக்க வேண்டும்.

ஒரு தனி பாத்திரத்தில், வெல்லம் மற்றும் சிறிது நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

வடிகட்டியால் வெல்லதை வடிகட்டி பொங்கலில் சேர்க்கவும்.

நன்கு கிளறி இரண்டு நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி, திராச்சை மற்றும் ஏலக்காய், முந்திரி, பாதாம் சேர்த்து வறுக்கவும்.

பின்பு பொங்கலில் சேர்த்து நன்கு கிளறவும்.

சூடாக பரிமாறவும்.


இந்த பதிவு நமக்கு சுற்றி உள்ள கண்ணுக்கு தெரியாத ஆபத்தை புரிந்து கொள்ள நல்ல பயனுள்ளதாக அமைந்து இருக்கும் என நம்புகிறேன். சிவப்பு  ஹிட் உபயோகிக்கும் பழக்கத்தை கொண்டுவருவதின்  மூலம் ஆரோகியமான வாழ்க்கை முறையை கையாள முடியும் மற்றும் food poison போன்ற வியாதிகளிடம் இருந்து பாதுகாத்து  கொள்ளமுடியும். மொத்தத்தில் சிவப்பு  ஹிட் வாங்குவது வீட்டுக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக அமையும். #SayNoToFoodPoisoningமேலும் லால் ஹிட் பற்றின விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !
Related Posts Plugin for WordPress, Blogger...